Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி!

Constitution Day of India Pledge at Annamalai University

Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைவேந்தர் முனைவர் இராம. கதிரேசன், பதிவாளர் பொறுப்பு செல்வநாராயணன், நிதி அதிகாரி, இணை மற்றும் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், அனைத்து இயக்குநர்கள், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள், ‘இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் ஆகியவற்றை எய்திடச் செய்யவும் அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்,நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் 26- நாளில் இந்த அரசமைப்பினை ஏற்று நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’என அரசமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

pledge constitution day Annamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe