Conspiracy to overturn a train with a cow's head in nagercoil

Advertisment

காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (20-02-24) இரவு நாகர்கோவில் மாவட்டம் அருகே பார்வதிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் திடீரென கற்களின் மீதி மோதியதால் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, ரயில் ஓட்டுநர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.