தேனி மாவட்டத்தில் உள்ள தமிழகம் கேரளா எல்லையில் அமைத்துள்ளது கர்னல் பென்னிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை இந்த முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளவில் மழை பெய்தால் நீர்மட்டம் உயரும் ஆனால் தற்பொழுது கேரளா இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தும் கூட பெரியாறு அணை நீர்மட்டம் உயராமல் இருப்பதற்கு கேரளா அரசின் சதி வேலையே காரணம் என தெரிகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனால் கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவில் உள்ள இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இருந்த போதும் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 114 அடி அதாவது இரண்டு அடி மட்டுமே உயர்ந்துள்ளது.
ஆனால் முல்லை பெரியார் அணைய விட எட்டு மடங்கு பரப்பளவில் பெரிய இடுக்கி அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் பத்தடி ஆக உயர்ந்துள்ளது.இது சம்பந்தமாக தமிழக பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது...முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி 777 சதுரடி கிலோ மீட்டர் ஆகும். அணையின் நீர்மட்டம் 152 அடி இதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 17- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3b44307a-82d3-42e2-b585-9065d20c68c1.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
777 சதுர சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை நீர் முழுவதும் பெரியாறு அணையில் தேக்க அணை ஒப்பந்தம் மூலம் தமிழகத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. தேக்கடியில் பெய்யும் மழை நீரையும் பெரியாறு அணையில் பெய்யும் மழை நீரையும் மட்டுமே தமிழக பொதுப்பணி துறையினரால் கணக்கெடுக்க முடியும். ஆனால் அணையின் நீர் பிடிப்பு பகுதியான 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை நீரை கேரள அரசு தான் கணக்கிடுகிறது. இதனை கேரளா விரும்பினால் தகவல் தெரிவிக்கும், விரும்பாவிட்டால் மலையளவு குறைந்துள்ளதாக கணக்கு காட்டி விடும் கடந்த 17ஆம் தேதி முதல் இடுக்கி உள்ளிட்ட கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இவ்வளவு மழை பெய்தும் பெரியாறு அணைக்கு ஆயிரம் கன அடி தண்ணீர்கூட வினாடிக்கு வரவில்லை. ஆனால் அதே நேரம் கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உயர்ந்துள்ளது. பெரியாறு அணை நிறைந்தால் மட்டுமே உபரி நீர் வண்டிப்பெரியார் வழியாக திறக்கப்படும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் 114 அடிக்கு குறைவாக உள்ள போதே வண்டிப்பெரியார் ஆற்றில் எட்டு அடி உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரள அரசு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணை கட்டி பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை திருப்பி உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயரவில்லை. கடந்தாண்டு வரை பெரியாறு அணைக்கு குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கேரளா அரசு சுரங்கம் தோண்டி நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது.
பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான 7777 சதுர கிலோமீட்டரில் 277 சதுர கிலோமீட்டர் தமிழக வனப் பகுதியாகும். இந்த வனப்பகுதியில் காமராஜர் காலத்தில் சிவகிரி மலை பகுதியில் செண்பகவல்லி தடுப்பணை சீரமைக்கப்பட்டது. ஆனால் கேரளா இந்த அணையை பிடித்துவிட்டது. அதன்பின் தமிழக கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தடுப்பணை கட்டுவது என்றும், அதற்கான செலவை தமிழக அரசு ஏற்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அணை கட்டுவதற்கு தேவையான பணத்தை டெபாசிட் செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும். இது வரை கேரளா அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.
எனவே தமிழக வனப்பகுதியில் பெய்யும் மழை நீரும் இடுக்கி அணைக்கு செல்கிறது. எனவே தமிழக அரசு இனிமேலாவது தலையிட்டு இப்பிரச்சனையில் உரிய தீர்வு காணாவிட்டால் கனமழை பெய்தாலும் பெரியாறு அணைக்கு நீர் வராத நிலை ஏற்படும் என்று கூறினார்கள். ஆகவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து சதித்திட்டம் தீட்டி வரும் கேரளா அரசு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைப் பெரியாறு அணையை நம்பி வாழும் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)