Advertisment

ஆறுதல் கூறிய இபிஎஸ்; வாழ்த்து தெரிவித்த அஜித்  

Consoling EPS; Ajith congratulated

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) கடந்த 24 ஆம் தேதி அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில்,அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் நேரில் சென்றும்சமூக ஊடகங்களில் பதிவிட்டும் ஆறுதல் கூறினர்.

Advertisment

நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர். ட்விட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர்.

Advertisment

இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜித்தை தொலைப்பேசி மூலம்தொடர்பு கொண்டு அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறியதாகவும், அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

admk ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe