ADVERTISEMENT

“100 நாள் வேலை திட்டத்தின் கூலியை 300 ரூபாயாக உயர்த்த பரிசீலினை..” - அமைச்சர் பெரியக்கருப்பன்

05:41 PM Jul 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 300 ரூபாயாக கூலி உயர்த்தித் தர பரிசீலினை செய்யப்படும்” என உளுந்தூர்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்ன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைதிட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் மற்றும் தமிழக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன், "100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். 100 வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியளர்களுக்கு ஒரு நாள் ஊதியமான 273 ரூபாயை, 300 ரூபாயாக உயர்த்தித் தர தமிழக முதல்வர் உத்தரவுடன் பரிசீலினை செய்யப்படும்” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செம்பியன்மாதேவி கிராமத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது சாலையை தரமான முறையிலும் எந்தவிதமான குறைபாடும் இல்லாமலும் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT