'Consideration to hold a direct consultation ...' Minister Ponmudi informed

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடி கலந்தாய்வு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழலில், அதற்கு மாற்றாக பழைய முறையில் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே இடத்தில் கலந்தாய்வு என்ற அடிப்படையில் கொண்டு வருவது சாத்தியம் இல்லை ஏனென்றால் ஒரே கலந்தாய்வு என்ற வகையில் கொண்டு வந்தால் பிறகு ஆன்லைன் முறைக்கு மாற்ற சொல்வீர்கள். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஆன்லைன் கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் முறைக்கு மாற்றாக பழைய முறைப்படி நேரடியாக கலந்தாய்வு நடத்தப் பரிசீலனை செய்து வருகிறோம். ஒரே இடத்தில் கலந்தாய்வு நடத்தாமல் 10 இடங்களில் கலந்தாய்வு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது'' என தெரிவித்துள்ளார்.