Congress's 'Unity Yatra' started in Kumari - Tamil Nadu Chief Minister inaugurated!

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி ஒற்றுமை பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று துவங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார். இதன் காரணமாக நேற்று இரவு சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

இன்று மதியம் அவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா மண்டபத்தையும் சீரமைப்பு பணிகள் நடைபெறும் திருவள்ளுவர் மண்டபத்தையும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மண்டபத்தையும் காந்தி மண்டபத்தையும் பார்வையிட்ட ராகுல் காந்தி, காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும்கலந்து கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதில் பங்கேற்றார்.

Advertisment

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கதரால் செய்யப்பட்ட தேசியக் கொடி வழங்கி ராகுலின் நடைபயணத்தை துவக்கி வைத்தார். நடைபயணம் மேற்கொள்ளப்படும் இடத்தில் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் கிட்டத்தட்ட 2500 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி துவங்கிஇருக்கும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ள வடமாநிலத்திலிருந்து தொண்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.