Congressmen suddenly gathered outside Sathyamoorthy Bhavan!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிடப் போவதாக வந்த தகவலை அடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கட்சி அலுவலகத்தின் வாயிலில் குவிந்தனர்.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன், சென்னை மாவட்டத் தலைவர்கள் ராஜசேகரன், ரஞ்சன் குமார், அடையாறு துரை, நாஞ்சில் பிரசாத், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம், மாநிலச் செயலாளர்கள் கடல் தமிழ்வாணன், ரஞ்சித்குமார், அயன்புரம் சரவணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் இருக்கைகள் அமைத்து சத்தியமூர்த்தி பவன் வாயிலில் அமர்ந்திருந்தனர்.

Advertisment

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காங்கிரஸ் கட்சியினரிடம், "கட்சி அலுவலகத்திற்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம். யார் போராட்டம் நடத்த வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் கலைந்து செல்லுங்கள்" என்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதன் காரணமாக சத்தியமூர்த்தி பவன் வெளியிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.