நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கலுங்கடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்றதாக கூறி காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்ற நாங்குநேரி காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisment

congress workers protest in nanguneri

தேர்தல் நடக்கும் போது வாக்கு சேகரித்தது உட்பட 171எச், 188, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், அதேநேரத்தில் தொகுதிக்குள் முகாமிட்டிருந்த அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கோரி நாங்குநேரி அருகே பரப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.