தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

Advertisment

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

CONGRESS WIN OFFICERS NOT ANNOUNCED KARUR MP JOTHIMANI

இந்நிலையில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், கரூர் ஒன்றியம் 16- வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். நீதிக்காக போராடிக்கொண்டிருப்பதாக ஜோதிமணி எம்.பி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.