Advertisment

திருப்பத்தூரில் 204 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Congress in Tirupathur

மத்திய பாஜக அரசின் புதிய மின் கொள்கை முடிவுப்படி, எந்த மாநில அரசும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்ககூடாது என விதிகளை விதித்துள்ளது. இந்த மின் கொள்கை சட்ட திருத்தத்தை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எதிர்த்தாலும், அதனை ஆதரித்து கையெழுத்திடும் நிலையிலேயே உள்ளது.

Advertisment

இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதிமுகஆட்சியில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் பெரும்பாலான எதிர்கட்சிகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாயிகள், நெசவாளர்கள், பொதுமக்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள மத்திய, மாநிலஅரசைகண்டித்து மே 26ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டார் மாநில தலைவர் அழகிரி. அதனைதொடர்ந்து தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் 204 இடங்களில் ஆம்பூர், வாணியம்பாடி,திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், வங்கிகளின் முன்பு சமூக இடைவெளியுடன் 5 பேருக்கு மிகாமல் மாநில, மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூராட்சி கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து 204 இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களை வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு ஒருங்கிணைத்துள்ளார்.

Congress in Tirupathur

கரோனா வைரஸ் ஊரடங்கு உள்ள நிலையில் அரசு வழிகாட்டியநெறிமுறைகளுக்கு உட்பட்டு போராட்டங்களில் பங்கேற்றோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்தினர். இருப்பினும் வாணியம்பாடியில் 2 குழுவினர், திருப்பத்தூரில் ஒரு குழுவினர், நாட்டறம்பள்ளியில் ஒரு குழுவினரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்துள்ளனர்.

congress thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe