Advertisment

ராகுல் காந்தி மீது வழக்கு; பாஜகவை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Congress struggle in Trichy condemning BJP

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டாக்டர் அம்பேத்கர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதைத் திசை திருப்பும் நோக்கில் ராகுல் காந்திமீது பொய் குற்றச் சாட்டை சுமத்தி வழக்குப்பதிவு செய்துள்ள பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மத்திய மாநில முன்னாள் அமைச்சருமான திருநாவுக்கரசர் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் வக்கீல் கோவிந்தராஜன்,வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மண்டல பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ், திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தெய்வேந்திரன்,சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் முரளி , இராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், அமைப்புசாரா தலைவர் மகேஸ்வரன், மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் வல்லபாய் பட்டேல், சத்தியநாதன்,பஷீர், கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல்,ராஜா டேனியல் ராய், தர்மேஷ், ஜெயம் கோபி,வெங்கடேஷ் காந்தி, அழகர், மலர் வெங்கடேஷ், கிருஷ்ணா, கனகராஜ், எட்வின், பாக்கியராஜ், மணிவேல், இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Advertisment
congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe