Advertisment

நாடாளுமன்ற எம்.பிக்கள் சஸ்பெண்ட்; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

Congress struggle in Erode following the suspension of MP

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் சார்பாக, மத்தியில் ஆளும்பாஜக மோடி அரசு பாராளுமன்றத்தில் 45 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்தும் 100 நாள் வேலைவாய்ப்பில் நான்கு மாதங்களாகத்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் சார்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு பாராளுமன்றத்தில் 45 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்தும் 100 நாள் வேலை வாய்ப்பில் நான்கு மாதங்களாகத்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கருங்கல்பாளையம் காந்திஜி சிலை அருகே இன்று மாலை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் ஈரோடு சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், மண்டல தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர், எச்.எம். ஜாபர் சாதிக் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத்தலைவர்களான ஈ.பி. ரவி, ஈ.ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாஜலம், வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் எம். ஜவஹர் அலி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி.எம். ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி.சி.டி.யூ) துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மாநில சேவா தள செயலாளர் எம். பேபி, மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம். ஜூபைர் அகமதுமற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Erode Parliament congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe