congress struggle in erode

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண்சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி, பொதுமக்களிடம் பெறப்பட்ட இரண்டு கோடி கையெழுத்துடன்ஜனாதிபதியைப் பார்க்கச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, செயலாளர் பிரியங்காகாந்தி ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisment

இந்தக் கைதைக்கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்,மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான 'ஜவஹர் இல்லம்' அருகே, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன்,விவசாயப்பிரிவு ஈரோடு மாவட்டத் தலைவர் பெரியசாமி, உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு பா.ஜ.கவைகண்டித்துக் கோஷம் எழுப்பினார்கள்.

Advertisment