சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம். லெனின் பிரசாத் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு மறைத்தது என கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் வலியுறுத்தியும்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், என். அஸ்வத்தாமன், ஜோஸ்வா ஜெரால்ட், நவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment