மணிப்பூர் விவகாரம்; காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பாக ஆர்ப்பாட்டம்!

Congress struggle against Bajwain regarding Manipur issue

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பாக மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி இனப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததைத்தடுக்க முயன்ற சகோதரனைக் கொலை செய்தது என இந்தக் கொடூரச் செயலைக் கட்டுப்படுத்தத்தவறிய பாஜக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கலைக்கக் கோரி பா.ஜ.க. அரசுகளுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநில துணைத் தலைவர் எம். ஜவஹர் அலி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறைத்தலைவர்மீரான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம். ஜூபைர் அகமது ஆகியோர் முன்னிலையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் கண்டனப் பேருரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத்தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறைத்தலைவர் கே.என். பாஷா, ஊடகப்பிரிவுத்தலைவர் ம.முகமது அர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டு மணிப்பூர் அரசைக் கலைத்துவிட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு கோஷம் எழுப்பினர்.

congress manipur
இதையும் படியுங்கள்
Subscribe