அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கொடி அணிவகுப்பு பேரணி வடசென்னையில் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கிய இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை வடசென்னை மா.செ திரவியம் செய்திருந்தார்.

Advertisment

Congress rally- k.s.alagiri

இந்தப் பேரணி மின்ட் ராஜிவ் காந்தி சிலை முன்பு தொடங்கி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கல்லறை சாலை வழியாக எம்.சி.ரோட்டில் உள்ள காமராஜர் பூங்காவில் பேரணி நிறைவுற்றது. இந்த பேரணி நடத்தியது தொடர்பாக மா.செ திரவியம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மீது வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் பேரணியை தமிழகத்தில் மிக சிறப்பாக செய்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைமையில் இருந்து பாராட்டு வந்த நிலையில், அனைத்து பெருமையும் மா.செ திரவியத்தையேச் சேரும் என்று தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.