ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் கரட்டூாில் 1958-ல் 45-ஆவது காங்கிரஸ் அரசியல் மாநாடு நினைவு காமராஜா் வளைவு நுழைவு வாயில் அமைக்கப்பட்டியிருந்தது. இந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் முயற்சியில் காமராஜா் பெயா் உட்பட அனைத்தையும் அந்த நுழைவு வாயிலில் இருந்து மாற்றி விட்டு எம்.ஜி.ஆா் பெயா் பொறித்த நுழைவு வாயிலாக மாற்றப்பட்டுள்ளதாம்.

Advertisment

Congress protests against sengkottiayan

இதை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று நாகா்கோவில் சுங்கான்கடையில் தனியாா் பொறியியல் கல்லூாியில் அரசு சாா்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கலந்து கொண்டாா்.

இதனால் செங்கோட்டையனுக்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக குமாி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் அந்த கல்லூாி அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞா் காங்கிரசாரை போலிசாா் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.