Congress party tried to show black flag against Prime Minister Modi

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் Go back modi பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அண்மையில் தமிழக மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஆனால் பாஜக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மீனவர்களுக்கு எனத்தனி அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் மீது கைது நடவடிக்கை இருக்காது என வாக்குறுதி அளித்தார்கள் இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

Advertisment

இதனைக் கண்டித்து இன்று தூத்துக்குடி வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கறுப்பு பேட்ச் அணிந்து பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட வந்தவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. GO BACK MODI என்ற பதாகையை ஏந்திமோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.