Congress party should give chance to Joseph Lewis to contest in Trichy constituency

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல். அடைக்கலராஜ் திருச்சி பாராளுமன்றத்தொகுதியில் 4 முறை போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது மகனும், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ்-க்கு திருச்சி பாராளுமன்றத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு தலைவர் புத்தூர் சார்லஸ் தலைமையில் காங்கிரசார் திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து இன்று இ-தபால் அனுப்பினர்.

Advertisment

அந்த தபாலில், காங்கிரஸின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ்-க்கு திருச்சி பாராளுமன்றத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த இ-தபால் அனுப்பும் போராட்ட நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சந்தான கிருஷ்ணன், அண்ணா சிலை விக்டர், அப்துல் குத்தூஸ், கலியமூர்த்தி, நடராஜ், முருகேசன், பாரூக்,பஷீர், தமிழ், எபினேசர், சதீஷ் மரிய ஜூடு, சிவாஜி, கம்பரசம்பேட்டை தர்மராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment