/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yasotha444.jpg)
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமானயசோதா உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி யசோதா காலமானார். அவருக்கு வயது 75. இவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்.எல்.ஏ. மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)