இன்று (29-12-2021) காலை 10.30 மணியளவில் (தி.நகர் தண்டபாணி தெருவில் அமைத்துள்ள) ராமகிருஷ்ணா பள்ளி எதிரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் BJP-யை சார்ந்த H.ராஜா நம் முன்னாள்பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவை இழிவாக பேசியதற்காக அவரை கண்டித்தும். H.ராஜா பேசுவதற்கு வழிவகை செய்த ராமகிருஷ்ணா மிசன் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.ஏ. முத்தழகன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக பிரிவு தலைவர் ஏ.கோபண்ணா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.