The Congress party that led the signature getting movement

Advertisment

இன்று (08.07.2021) காலை 6.15 மணிக்கு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கின் வாயிலில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் எம். சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தும் இந்தக் கடுமையான காலகட்டத்திலும் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் எரிவாயு விலையை உயர்த்திய மோடி அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செயல்தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் ஜி. முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 5வது வார்டு தலைவர் சக்தி, 16வது வார்டு தலைவர் சம்சுதீன், பொதுச்செயலாளர்கள் கள்ளிக்குடிகுமார், சிந்தாமணி விக்டர், பஜார் மொய்தீன், நிர்மல்குமார் திம்மை, செந்தில்குமார், மகளிரணி அஞ்சு, கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, கலைப்பிரிவு சண்முகம், மன்சூர் அலிகான், நரேந்திரன் ஸ்ரீ ராகவேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.