Advertisment

"பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" - ஜோதிமணி எம்.பி. அறிவுறுத்தல்!

congress party leader and karur lok sabha mp tweet

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் பாலியல் பாஜகவின் கே.டி. ராகவன் பாலியல் வீடியோவைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் பாஜகவின் அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்தியா முழுவதும் பாலியல் பாஜகதலைவர்களின் பாலியல் குற்றங்களைத் தனிப்பட்ட பிரச்சினையாககருத முடியாது. பாஜகவின் உள்ளும், வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும். அதனால்தான் குற்றவாளிகளை பாஜகதொடர்ந்து காப்பாற்றி வருகிறது. தமிழக மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையொடு இருக்க வேண்டும்.

Advertisment

‘உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கவுடா செய்துவிட்டார்’ என்று எந்த நேரமும் பாஜகவின் பி டீம் சீமான் களத்தில் குதித்து பாஜகவைக் காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம்தான் குறிப்பாக பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

congress jothimani MP Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe