சத்தியமூர்த்தி பவனில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73- வது பிறந்தநாள். இதை தொடர்ந்து சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலவேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

congress party interim president sonia gandhi 73th birthday celebration chennai sathyamoorthy bhavan

அதன் தொடர்ச்சியாக சென்னை சத்தியமூர்த்தி பவனில், கேக் வெட்டி, பட்டாசு வெடித்து சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே டெல்லியில் திமுக எம்.பி.க்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

73th birthday celebration Chennai congress interim president soniya gandhi congress leaders Sathyamoorthy Bhavan
இதையும் படியுங்கள்
Subscribe