Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ராயபுரம் மனோகர் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

congress party former leader in south chennai join with admk

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோகர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விலகினார். அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று (29/11/2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Advertisment

அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்ராயபுரம் மனோகர் அ.தி.மு.க.வில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

admk manohar royapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe