Advertisment

இந்தியா முழுவதும் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவதை கண்டித்து தலித் சமூகத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரி இன்று நாடு முழுக்க காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது. ஈரோட்டில் மாநகர் மாவட்டம் சார்பாக நகர தலைவர் ரவி தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்திலும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் மூலப்பாளையத்திலும் என இரண்டு அணிகளாக ஈரோடு காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.