இன்று (22.10.2021) சென்ன சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் 70வது பிறந்தநாளையொட்டி 70கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. எம்.பி ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.