Congress MP seeks cancellation of granite tender Appeal to the High Court!

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிசெல்லக்குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட 18 கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க, கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர், அக்டோபர் 9-ஆம் தேதி அறிவித்து, அக்டோபர் 17-ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்கங்கள் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அதன் பின்னர்தான் மாநில அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் விதிகள் உள்ள நிலையில், அப்படிப்பட்ட அனுமதிகளைப் பெறாமல் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் எனவும், வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

cnc

நவம்பர் 7-ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட இருப்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி, நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் செல்லக்குமார் தரப்பில் வழக்கறிஞர் முருகேந்திரன் முறையீடு செய்தார் முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், ஓரிரு நாட்களில் வழக்குபட்டியலிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.