Congress MLAs came to the Assembly in black shirts

மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை மற்றும் பதாகைகளுடன் வருகை தந்தனர். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட் எண் 4 அருகே கருப்புச் சட்டை அணிந்தவாறு ராகுல் காந்திக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். காங்கிரசில் மொத்தம் 18 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை தவிர்த்து 17 எம்எல்ஏக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Advertisment