congress members in vilupuram for uttarpradhes issue

நேற்று (02.10.2020) விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக உத்தரபிரதேச பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இப்போராட்டம்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாராளுமன்ற காங்கிரஸ் கொறடா ப.மாணிக்கம் தாகூர் M.P, ஆகியோர் தீர்மானித்தப்படி இந்தபோராட்டம் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

உத்தரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணை வன்புணர்வு செய்து கொன்றவர்களை கண்டுபிடிக்காமல் இறந்த பெண்ணின் தாய் தந்தையரைக்கு கூட தெரிவிக்காமல்எரித்ததை கேள்விப்பட்டு இதை விசாரிக்க அந்த பெண் வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை காவல் துறையால் தடுத்து நிறுத்தி கீழே தள்ளிவிட்டதை கண்டித்தும் உ.பி. அரசை கண்டித்தும் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. பின் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மகாராஜபுரம் ரெட்டியார் மில் அருகில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் கலந்துகொண்டனர்.

Advertisment