Advertisment

தேர்தல் அதிகாரிக்கு பொன்னாடை அணிவித்த காங்கிரசார்

தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

Advertisment

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் 4 நாடாளுமன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளது.இதில் தேர்தலுக்கு முன்பு வரை விதிமீறல்களை தேர்தல் அதிகாரிகள் ஆதரிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

Advertisment

congress

இந்த நிலையில் தான் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதியிலும் சுமார் ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகமாக வாங்கியிருந்தார். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் இப்ராகிம் பாபு உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் புதுக்கோட்டை கோட்டாட்சியர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து சால்வை அணிவித்து தேர்தலை நேர்மையாக நடத்தியமைக்கு நன்றி சொன்னார்கள்.

தேர்தல் நடந்து முடிந்ததும் வெற்றி பெற்றவர்களும் வெற்றியை நழுவவிட்டவர்களும் வாக்காளர்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் தான் நன்றி சொல்லி வருகிறார்கள் ஆனால் புதுக்கோட்டையில் தான் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு நன்றி கூறியுள்ளனர் என்று சக அலுவலர்களே பேசிக் கொண்டனர்.

elections COMPLIMENT congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe