Congress-led coalition? -Vaiko replied

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்எனவியூகங்கள்வெளியாகி வரும் நிலையில்,சசிகலாவின் வருகையால்தமிழக அரசியலில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைவது பற்றியும், சசிகலா வருகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைகோ,''தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையவே அமையாது. அரசியலிலும் சரி, அதிமுகவிலும்சரி சசிகலாவின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது''என்றார்.