Advertisment

"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை" - ஸ்டாலினை சந்தித்த பிறகு கே.எஸ்.அழகிரி பேட்டி...!

உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால், "ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

 congress-leaders-to-meet-dmk-president-mk-stalin

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. பின்னர் வெளியே வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது, "திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசியுள்ளோம். இனி கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும், ஸ்டாலினும் பேசி தீர்வு காண்போம். மற்றவர்கள் பேச தேவையில்லை.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். கூட்டணியில் ஆரோக்கியமான விவாதங்களும் வந்து செல்லும்.நடிகர் ரஜினிகாந்த், துக்ளக்குடன் முரசொலியை ஒப்பிட்டு பேசியது தவறு" என தெரிவித்தார்.

congress Stalin DMK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe