Advertisment

"ராஃபியாவைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும்"- ஜோதிமணி எம்.பி.!

congress leader karur mp jothimani tweets

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.

Advertisment

இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக் கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்படவேண்டும்.

Advertisment

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்ப கல்வி முதலே பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மடுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும். சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

congress jothimani MP Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe