Advertisment

தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.யசோதா சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75. இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார்.முன்னாள் எம்.எல்.ஏ. டி.யசோதா மறைவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு எம்.பி., செல்லக்குமார் எம்.பி., அ.தி.மு.க.வின் பாலகங்கா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறினர்.