Advertisment

'கலைஞா் போராடி பெற்றாா்:எடப்பாடி பறிகொடுத்து விட்டார்'-கே.எஸ்.அழகிாி சாடல்!

congress ks azhagiri

Advertisment

குமாி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (25-ம் தேதி) நித்திரைவிளை நடைக்காவில் நடந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ்.அழகிாி இன்று அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாாின் நினைவிடத்தில் மலா் தூவி மாியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து அழகிாி செய்தியாளா்களிடம் பேசும் போது, மாநில பாடத்திட்டத்தில் படிப்பவா்கள் எழுதும் வகையில் நீட் தோ்வு கேள்விகள் இருக்க வேண்டும். படிப்பதுஒரு பாடத்திட்டம் எழுதுவது வேறொரு பாடத்திட்டமா? 12 ஆயிரம் ஆண்டுகால இந்தியா வரலாற்றை மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஒரு குழு அமைத்து இருக்கிறாா்கள் அதில் இந்தியை பேசும் அதை தாய்மொழியாக கொண்டவா்கள் தான் உள்ளனா்.

தமிழக ஆளுனா் காலச்சக்கரத்தை மாற்றி சுழற்றுகிறாா். மருத்துவத்துறையில் 7.5 சதவிகிதம் ஓதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக அவா் கையெழுத்து போட வேண்டும். திருமாவளவன் மீது வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை. புராணங்களில் பெண்களை இழிவாக கூறியுள்ளனா். அவா் இந்து மதத்திற்கோ இந்து மத பெண்களுக்கோ எதிராக பேசவில்லை. புராணங்களில் கூறப்பட்டதை மறுபதிவு செய்துள்ளாா். இந்த விசயத்தில் திருமாவளவனுக்கு காங்கிரஸ் ஆதரவாக தான் இருக்கிறது.

Advertisment

congress ks azhagiri

மாநில அரசுகளின் உாிமைகளுக்காக கலைஞா், நம்பூதிாிபாடு போன்ற தலைவா்கள் போராடி உாிமைகளை வெற்றெடுத்தனா். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அந்த உாிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டாா். குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றது அவருக்கு தான் பின்னடைவு. கன்னியாகுமாி பாராளுமன்ற தொகுதி இடைத்தோ்தலில் மீண்டும் காங்கிரஸ் தான் போட்டியிடும் என்றாா்.

Kanyakumari KS Azhagiri
இதையும் படியுங்கள்
Subscribe