Advertisment

தம்பித்துரையே எனக்கு வெற்றியைத் தேடித்தருவார்- கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேட்டி

கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி. புதுக்கோட்டையில் கூட்டணிக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

jothimani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது அவர் கூறியதாவது.. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் தொகுதிக்கு என்று குழு அமைத்து மக்களுக்குத் தேவையானதை அறிக்கையாகத் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளோம். அதுவே எனது பிரச்சாரத்தின் வியூகமாக இருக்கும்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் பத்தாண்டுகாலம் தொடர்ந்து உறுப்பினராகவும், மக்களவை துணைச் சபாநாயகராகவும் இருக்கும் தம்பித்துரை ஒரு வளர்ச்சித் திட்டப்பணிகளைக்கூட செய்யவில்லை. அவரது செயல்பாடுகளே எனக்கு வெற்றியைத் தேடித்தரும். நான் வெற்றி பெற்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட எனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார்.

congress jothimani karur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe