Skip to main content

கக்கன் பிறந்தநாள்: காங்கிரஸார் மலர் தூவி மரியாதை..! (படங்கள்) 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 114வது பிறந்தநாளான இன்று (18.06.2021) அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். 

 

சென்னையில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் கக்கனின் உருவப்படத்திற்கு முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், ஆ. தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், டி. செல்வம், செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. பொன் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் வீரபாண்டி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், அடையார் துரை, டெல்லி பாபு, ரஞ்சன் குமார் ஆகியோரும் கலந்துகொண்டு கக்கன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கக்கன் திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Tamil Nadu government tax exemption for Kakkan movie

 

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபு மாணிக்கம், ரகோத் விஜய் இருவரும் இணைந்து இயக்க ஜோசப் பேபி கதை எழுதி தயாரித்து கக்கன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வெளியிட்டார்.

 

இப்படம் நாளை (25.08.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நன்றி தெரிவித்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவு பகிர்ந்திருந்தார். அதில், "உள்ளாட்சி அமைப்பின் கேளிக்கை வரி சட்டப்படி தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருப்பதைப் பயன்படுத்திக்கொள்கிற வகையில், பெருந்திரளான தமிழக மக்கள் கக்கன் திரைப்படம் வெற்றிகரமாக அமைவதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார். 

 

முன்னதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்பு இந்தாண்டு வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா (படங்கள்)

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

காங்கிரஸ் கட்சியின் 138 வது நிறுவன நாள் விழா நேற்று (28.12.2022) தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்றி வைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை சார்பில் அதன் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த தியாகி கக்கன் சிலையை கே.எஸ்.அழகிரி திறந்து வைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். இவ்விரு நிகழ்வுகளிலும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்லபிரசாத், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.