மகாகவி பாராதியாரின் 140வது பிறந்தநாள் இன்று (11.12.2021) கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், பாரதியாரின் 140வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. இதில், பாரதியாரின் உருவப் படத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பலராமன் தலைமையில் அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-2_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-1_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th_5.jpg)