Congress has provided welfare assistance on the occasion of Rahul Gandhi's birthday

Advertisment

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தி எம்.பி பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம். புள்ளம்பாடி உள்ளிட்ட 11 வட்டாரங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பட்டத்தம்மாள் தெருவில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பிரமிளா, மகளிர் அணி சுதா, வட்டார தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு அப்துல் காதர், சேவாதளம் தெற்கு மாவட்ட தலைவி லட்சுமி, சேவா தளம் வடக்கு மாவட்ட தலைவி மேரி ஆஷா, வட்டார பொறுப்பாளர் செல்வம், மண்ணச்சநல்லூர் நகர பொறுப்பாளர் பாட்ஷா, நிர்வாகிகள் செல்வராஜ், மாசிலாமணி, பழனியாண்டி, கணேசன், மூர்த்தி, சந்தியாகு அலெக்ஸாண்டர் உட்பட திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட தலைவர் திருச்சி கலை கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.