Advertisment

‘சீமானிடம் இருக்கும் வெடிகுண்டை பறிமுதல் செய்ய வேண்டும்’ - காங்கிரஸ் புகார்

Congress files complaint against Seeman with police

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அதனையொட்டி இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிட, அவரை எதிர்த்து சீதாலட்சுமி என்ற பெண் வேட்பாளரை நாதக நிறுத்தியுள்ளது. அதிமுக, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடாத காரணத்தினால், இரு முனை போட்டி நிலவி வருகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த நாதக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சீமான் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் அதனை எடுத்து வீசினால் உங்களை புதைத்த இடத்தில் ஒரு புல்லு கூட முளைக்காது என்று பேசி இருந்தார். இந்த நிலையில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.ராஜன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அவரது வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு அசோகபுரம் நெரிக்கல்மேடு பகுதியில் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தந்தை பெரியாரிடம் உள்ளது வெறும் வெங்காயம்தான். அந்த வெங்காயத்தை என் மீது வீசினால் ஒன்றுமாகாது; ஆனால் என் தலைவன் கொடுத்த வெடிகுண்டு என்னிடம் உள்ளது. அதை நான் உங்கள் மீது வீசினால் உங்களை புதைத்த இடத்தில் ஒரு புல்லு கூட முளைக்காது ஜாக்கிரதயாக இருந்து கொள் என்று சொல்லி தன்னிடம் வெடிகுண்டு உள்ளதாகவும் அந்த வெடிகுண்டை மக்கள் மீது வீசுவதாகவும் மக்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசியுள்ளார். எனவே தேர்தல் தேர்தல் அலுவலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உடனடியாக சீமானிடம் உள்ள வெடிகுண்டை பறிமுதல் செய்ய வேண்டும், அது மட்டுமின்றி சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்க வலியுறுத்தியுள்ளார்.

congress ntk seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe