Congress executive caught with pistol at airport

Advertisment

கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாவட்டம் பாலக்காடு பட்டாம்பி பகுதியை சேர்ந்த பிரபல காங்கிரஸ் நிர்வாகி கே.எஸ்.பி.ஏ தங்கல் என்பவர் பெங்களூர் செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் கைத்துப்பாக்கி மற்றும் ஏழு துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான நிலைய நிர்வாகத்தினர் அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்த கே.எஸ்.பி.ஏ.தங்கல் என்பதும், அங்கு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் உரிய ஆவணமின்றி அதனை எடுத்து வந்தது உறுதியானது. இதன் பேரில் ஆயூத தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.