Advertisment

நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்க காங்கிரஸ் கோரிக்கை!

 Congress demands Bharat Ratna award for actor Shivaji

சினிமா உலகின் பிதாமகனாக போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்கிற அளவுக்கு கோலோச்சியவர். அவரது நடிப்பின் திறமை உலகம் முழுவதும் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. உலகத்தின் பல நாடுகள், சிவாஜியின் நடிப்பு திறமையைப் புகழ்ந்தும் பாராட்டியும் பல விருதுகளை வழங்கியிருக்கிறது.

Advertisment

ஆனால், இந்தியாவின் உயரிய விருதான ’பாரத் ரத்னா விருது மட்டும் சிவாஜிக்கு கொடுக்கப்படவே இல்லை. இந்த நிலையில், அவருக்கு ’பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர். அவரது கோரிக்கைக் கடிதம் கிடைத்திருப்பதாக மானிக்கம் தாக்கூருக்கு கடந்த வாரம் பதில் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி.

Advertisment

‘’பாரத் ரத்னா விருது சிவாஜிக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். விருது கிடைக்கும் வரை எங்களது முயற்சி தொடரும் ‘’ என்கிறார் மானிக்கம் தாக்கூர் !

actor sivaji ganesan Bharat Ratna Award congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe