Congress Committee President fell and injured in walking

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு காங். கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி. சென்னையில் தங்கி இருந்த அவர், கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கீரப்பாளையத்திற்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை வீட்டின் தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தவறி விழுந்ததில் நெற்றி மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisment

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சில தினங்கள் கே.எஸ். அழகிரியை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் உள்ளார். காங். கமிட்டித் தலைவர் தவறி விழுந்து அடிபட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சியினர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Advertisment