Advertisment

முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்! (படங்கள்)

தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று (08.12.2021) சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர்.

Advertisment

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

துக்கத்தை அனுசரிக்கும் விதமாக அவர் கருப்புத் துண்டு அணிந்திருந்தார். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

congress cm stalin general bipin rawat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe