பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5ஆம் தேதி பஞ்சாபில் நடைபெற இருந்த மாபெரும் பேரணி மற்றும் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் தனித்தனியே குழு அமைத்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிற வகையில் உண்மை நிலையை விளக்கி சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் மனு அளித்தனர்.