சேலம் இரும்பாலையைதனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைஎதிர்த்து வரும் 29 ஆம் தேதி சேலத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisment

salem steel plant

Advertisment

சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதற்கு இந்திய உருக்கு ஆணைய நிர்வாகமே காரணம் எனக்கூறிய கே.எஸ்.அழகிரி இந்த போராட்டத்தினை அறிவித்துள்ளார்.

தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான மறுநாளே (ஜூலை 5) சேலம் உருக்காலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் 950 பேரும் காலை 6 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்கள் குடும்பத்துடனும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறது காங்கிரஸ்.