சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி.. 

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி சென்னை தலைமை அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக தொற்று பாதித்தவர்கள் ஆம்புலன்ஸில் வெகும் நேரம் காத்திருந்து அனுமதி பெற்று சிகிச்சை பெற்றனர். ஆனால், தற்போது அதே மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ்கூட காத்திருக்காமல் உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால், நிலைமை மோசமாக இருந்த நேரத்திலும், தற்போதும் தன்னலம் கருதாமல் முன்வரிசையில் நின்று எப்போதும் தொற்று பாதித்தவர்களுக்காக போராடி அவர்களை நலம் பெற செய்ததுமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி கடிதம் மற்றும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தனர். அதனை அங்கு பணிபுரியும் காவலாளி ஒருவர் வாசலருகே வைக்கப்பட்ட போர்டில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் பார்வைக்காக ஒட்டி வைத்தார்.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe