தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26/12/2021) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 97- வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

Advertisment

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "97 வயதானாலும் நல்லகண்ணுவும் ஓர் இளைஞர் தான்; அவரை இன்னும் இளைஞராகத்தான் பார்க்கிறேன். மக்களுக்காக இன்றும் போராடி வரும் நல்லக்கண்ணுவிற்கு தி.மு.க. சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்" என்றார்.

Advertisment

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மற்றும் சி.மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.